தரைக்கடியில் செல்லும் மின்சார கேபிளில் ஏற்பட்ட தீவிபத்தால் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மின்தடை
Nov 17, 2024
376
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று இரவு திடீர் மின்தடை ஏற்பட்டது.மருத்துவமனைக்கு வந்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தரைக்கடியில் செல்லக்கூடிய மின்சார கேபிளில் ஏற்பட்ட தீ விபத்தால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு.. உறவினர்கள் போராட்டம்..!
Nov 15, 2024
748
சென்னை, கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் வயிற்று வலி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த நிலையில், உரிய சிகிச்சை அளிக்கவில்லை என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பித்தப்பை கல் பிரச்சனை காரணமாக அனுமதிக்கப்பட்ட பெரும்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ்க்கு அவசர சிகிச்சை பிரிவில் எவ்வித சிகிச்சையும் அளிக்கவில்லை என்றும், துண்டு சீட்டில் சிகிச்சை விவரங்களை எழுதிக் கொடுத்ததாகவும் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்னேஷ்க்கு அங்கு சிகிச்சை தொடர முடியாத நிலையில், நோய் தீவிரத்துடன் அழைத்து வரப்பட்டதாக கிண்டி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விக்னேஷ் அழைத்துவரப்பட்ட அன்று மருத்துவர்கள் பணியில் இருந்ததாகவும், திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் விக்னேஷ் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர்
Nov 13, 2024
653
தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.இன்று காலை கிண்டி அரசு மருத்துவமனையில், ஓ.பி.சீட்டு வாங்கிக்கொண்டு நோயாளி போல வந்த பெருங்களத்தூரைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் புற்றுநோய் துறையில் பணியாற்றும் மருத்துவர் பாலாஜியின்கழுத்து, முகம் உள்பட 7 இடத்தில் குத்திவிட்டு தப்ப முயன்றார்.அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அவரை பிடித்து அடித்து, உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News